ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆகப்பதிவு.!
ஜப்பானின் இசு தீவுகளில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தீபகற்பத்தில் இருந்து பரவியுள்ள எரிமலைத் தீவுகளின் குழுவான இசு தீவுகளில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப்பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 28.2 கிமீ ஆழத்தில் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.