சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு.!
கடந்த 18ஆம் தேதி (திங்கட்கிழமை) சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினர். சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 1,000 பேர் காயமடைந்தனர்.
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது.
தற்போது, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!
மேலும்,நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டதோ அந்த இடங்களுக்கு எல்லாம் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தொடங்கினார்கள். நிலநடுக்கம் மட்டுமின்றி சீனாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியில் இருக்கிறார்கள்.