நீங்கா துயரம்!! மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்…பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்வு!
கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரம் நீங்குவதற்குள் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 6 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இன்றும் 6.1 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன், 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், 7ம் தேதி கடந்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடந்த 4 நாட்களில் மட்டும் 4,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஹெராட்டில் உள்ள 20 கிராமங்களில் 1,983 குடியிருப்பு வீடுகளும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை உறுதியளித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது, இது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.