மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!

Earthquake in Myanmar

Earthquake : மியான்மரில் 4.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS தெரிவித்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 28) ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணியளவில் மியான்மர் நாட்டின் சீன எல்லை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையமான NCS (National Center for Seismology) தகவல் தெரிவித்துள்ள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

பூமத்திய அட்சரேகை 25.39 மற்றும் தீர்க்கரேகை 96.06 இல் நிலமட்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு அமைந்திருந்ததாக NCS தெரிவித்துள்ளது. இது லேசான நில அதிர்வு என்பதால், ஒரு சில இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டதாகவும், சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல , மியான்மர் அருகில் சீன எல்லைக்கு உட்பட்ட ஜிசாங் எனும் பகுதியில் 4.2 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையமான NCS தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir