அதிகாலையில் அதிர்ச்சி….திபெத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. !
இன்று தெற்கு திபெத்தில் உள்ள ஜிசாங் பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா மற்றும் இந்தியாவை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 1 மணியளவில் தெற்கு திபெத்தின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலநடுக்கம் பெரிய அளவில் ஏற்படாததால், பாதிப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.
அதிகாலை 1 மணிக்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அதிர்ச்சியானார்கள். மேலும், இதைபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.