McDonald உணவால் அதிகரித்த E-coli பாதிப்பு.! ஒருவர் மரணம்.. அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்!
அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள McDonalds உணவகங்களில் இருந்து குவார்ட்டர் பவுண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.
கொலராடோ : அமெரிக்காவில் McDonald’s Quarter Pounders சாண்ட்விச் சாப்பிட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் E. coli பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
கொலராடோவில் பிரபல உணவகமான McDonald’s Quarter Pounders-ல் சாண்ட்விச் சாப்பிட்டு இதுவரை 10 மாகாணங்களிலிருந்து குறைந்தபட்சம் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நோய் பரவலை தடுக்க, அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உணவு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த உணவில் பதப்படுத்தப்பட்ட வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சியால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
E. COLI OUTBREAK: CDC is investigating 49 illnesses in 10 states linked to McDonald’s Quarter Pounder hamburgers. If you ate a Quarter Pounder hamburger from McDonald’s and have severe symptoms of E. coli, contact your healthcare provider. https://t.co/g87itkupCQ pic.twitter.com/gHzUKCnTi9
— CDC (@CDCgov) October 22, 2024
இதைத்தொடர்ந்து கொலராடோ, கன்சாஸ், உட்டா மற்றும் வயோமிங் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள McDonalds உணவகங்களில் இருந்து குவார்ட்டர் பவுண்டரை விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
இ. கோலி O157:H7 என்பது கடுமையான நோயை உண்டாக்கக் கூடியது. இது 1993 ஆம் ஆண்டு பரவியதன் மூலம் ஜாக் இன் தி பாக்ஸ் உணவகங்களில் சமைக்கப்படாத ஹாம்பர்கர் சாப்பிட்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஈ.கோலை என்றால் என்ன?
E. coli என பொதுவாக அறியப்படும் Escherichia coli, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும்.
ஈ.கோலை அறிகுறிகள்:
- கடுமையான வயிற்றுப் பிடிப்புகள்
- வயிற்றுப்போக்கு
- அடிக்கடி வாந்தி
- காய்ச்சல்
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் பொதுவாக பாக்டீரியாவை வெளிப்படுத்திய மூன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு தோன்றும், ஆனால் சில நேரங்களில் ஒரு நாள் அல்லது 10 தாமதமாக ஆரம்பிக்கலாம்.
பெரும்பாலான மக்கள் 5 முதல் 7 நாட்களுக்குள் குணமடைவார்கள். ஆனால், கடுமையான நோய் தாக்கத்தினால், ஈ.கோலை ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம் (HUS) எனப்படும் ஒரு தீவிரமான சிக்கலுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரகங்களைப் பாதிக்கிறது, இதனால் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது.