ஈராக்கில் புழுதி புயல் : ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்..! விமான சேவை ரத்து….!
ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது.
ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறி உள்ளது. புழுதிப்புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்குப் புலப்படாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் நகரில் விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்தப் புழுதி புயல் காரணமாக பலர் சுவாசப் பிரச்சினைக் ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2016 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) 2026 ஆம் ஆண்டில் ஈராக் ஒரு வருடத்தில் 300 தூசி புயல் நிகழ்வுகளைக் காணக்கூடும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.