துபாய்: ஈமான் கலாச்சார அமைப்பு நடத்திய ‘குர்ஆன் ஓதும்’ போட்டி.!
துபாய் ஈமான் கலாச்சார அமைப்பு சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவிகளுக்கான கிராத் (குர்ஆன் ஓதும்) போட்டி நடைபெற்றது. அதன் பரிசளிப்பு விழா அஸ்கான் ஹவுஸ் 3வது தளத்தில் ஈமான் கலாச்சார அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹபீபுல்லா கான் அவர்கள் தலைமையில் துணைத் தலைவர் அல்ஹாஜ் கமால் அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று ஈமான் கலாச்சார அமைப்பின் பொதுச் செயலாளர் ஆலிஜனாப் ஹமீது யாசின் பேசினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நான் டாக்டர் அமீர்கான் தேசிய பொதுச்செயலாளர் INTUC, போட்டியில் பரீசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினேன்.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர் பைரோஸ்கான், டாக்டர் பாஷிலா ஆசாத் சமூக ஆர்வலர் முனைவர் முகம்மது முகைதீன் ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் ஜனாப். நியாஸ் அகமது, மெளலவி ஹாபிஸ் ஜமீல், ஜனாப், அப்துல் காதர், ஆயப்பாடி முஜ்புர் ரஹ்மான், அண்ணன் ஆலிஜனாப் ஹபீப் ரஹ்மான், ஆலி ஜனாப் அபி சாகுல் அமீது , ஜனாப். அப்பாஸ் ஆலம் கான், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலி ஜனாப் ஹாஜா அலாவுதீன் தொகுத்து வழங்கினார் 3 வயதில் துவங்கி 20 வயது வரை 4 பிரிவாக பிரித்து போட்டி நடைபெற்றது.
தங்க நாணயம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது 4 வயது முதல் 8வயது வரை முதல் பரிசு அப்ரீஸ் ஈமான், 2ம் பரிசு முகம்மது அப்துல்லா நஜீம், 3வது பரிசு முகம்மது வாசிம் அபு தாஹிர், 9 வயது முதல் 12 வயது வரை முதல் பரிசு வானியா தாஹிர் அபுதாஹிர், 2 வது பரிசு ரிம்ஷா பஷீன் முகம்மதியாசீன், 3வது பரிசு ரிப்னா ஈமான் பீர்மைதீன் 13வயது முதல் 16 வயதுவரை முதல் பரிசு ஹாசிம் முகம்மது ஷாஜஹான் 2வது பரிசு பைஷா பாத்திமா செய்யது முஸ்தபா 3 வது ஈசாக் அகமது, 17 வயது முதல் 20 வயது வரை முதல் பரிசு முஃபிதா முஹம்மது, 2வது பரிசு ஆயிஷா அப்ஷான் மாஹின் அபூபக்கர் , 3வது பரிசு மசூதா ஷரீன் முகம்மது ஹசன் ஆகியோர்க்கு பரிசு வழங்கபட்டது. போட்டியில் சுமார் 160 பேர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவர்க்கும் சான்றும் ஆறுதல் பரீசும் வழங்கப்பட்டது.