Categories: உலகம்

குழந்தை பிறந்து இரண்டே மாதங்கள்.. கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி.!

Published by
கெளதம்

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர். திருணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும், குழந்தை பிறந்து இரண்டே மாதங்களே ஆன நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து செய்வதாக பகீரங்கமாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளவரசி தனது பதிவில், “தனது கணவர் திருமணத்திற்கு புறம்பான உறவுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, “அன்புள்ள கணவரே, நீங்கள் மற்ற தோழர்களுடன் ஆக்கிரமித்துள்ளதால், நான் எங்கள் விவாகரத்தை அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.”

துபாய் இளவரசி தன்னை அவரது முன்னாள் மனைவி என்று குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய முறையில் கணவரை விவாகரத்து செய்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடராமல் இருப்பதையும், இளவரசி ஷேக் மனாவுடன் வைத்திருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்தும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

10 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

11 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

12 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

13 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

13 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

13 hours ago