ஐரோப்பாவில் போதைப்பொருள் வர்த்தத்திற்காக பயன்படுத்தப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட செயலி தொடர்பாக 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐரோப்பாவின் ஜெர்மனியில், புலனாய்வாளர்கள் போதைப்பொருள் வர்த்தத்திற்காக பயன்படுத்தப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட செயலியான எக்ஸ்கிளூவை (Exclu) முடக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய 48 பேரை ஜெர்மன் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். எக்ஸ்கிளூ செயலி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் வர்த்தகத்தில் பாதுகாப்பான சேனலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் போலந்தில் 70 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவர்கள் எக்ஸ்கிளூ (Exclu) என்ற தகவல் தொடர்பு சேவையின் பயனர்கள், ஆபரேட்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணையின் விளைவாக இந்த கைதுகள் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு மேற்கு ஜேர்மனியில் ஒரு முன்னாள் இராணுவ பதுங்கு குழி மூடப்பட்டது. அதில் மீதமிருந்தவர்கள் போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களைக் கையாளும் தளங்களை நடத்தினர். இதில் எக்ஸ்கிளூ (Exclu) என்ற மறைகுறியாக்கப்பட்ட செயலியும் அடங்கும். இந்த செயலியின் ஆறு மாத உரிமம் பெறுவதற்கு 800 யூரோக்கள் (ரூ.71,061) செலவாகும்.
இந்த எக்ஸ்கிளூ செயலி ஸ்மார்ட்போன் பயன்பாடாக பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. எக்ஸ்கிளூவின் 3000 பயனர்களில், 750 பேர் நெதர்லாந்தில் உள்ளனர். அங்கும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…