தோஷகானா ஊழல் வழக்கு..! இம்ரான் கானின் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு.!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பாக அண்மையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திலேயே அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்பிறகு, நீதிமன்றம் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்.பி பதவியானது பறிக்கப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இம்ரான் கானின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் அறிவிப்பை இஸ்லாமாபாத் நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி தாரிக் மெஹ்மூத் ஜஹாங்கிரி தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் வெளியிட்ட இந்த முடிவால் இம்ரான் கான் விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனவும், அவரது எம்.பி பதவியானது மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.