‘AI-யிடம் Please…Thankyou…சொல்ல வேண்டாம்.! கோடிக்கணக்குல லாஸ் ஆகுது’ – ஓபன் AI சிஇஒ கதறல்.!

Chat GPT-ல் 'ப்ளீஸ்' அல்லது 'நன்றி' எனச் சொல்வதன் மூலம் மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாக OPEN AI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மேன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

Open AI Sam Altman

வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு கொள்ளும்போது “தயவுசெய்து” (please) மற்றும் “நன்றி” (thank you) போன்ற மரியாதை வார்த்தைகளைப் பயன்படுத்துவது தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இவர் Al Chatbot-க்கு மரியாதை கொடுப்பது அவசியமற்றது எனக் கருதுகிறார். சிறிய உரையாடல்களுக்குக் கூட இதில் நிறைய டேட்டா மற்றும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ் வலைதளத்தில் உள்ள ஒரு பயனர், ” மக்கள்  AI-உடன் உரையாடலின் போது, தங்கள் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம், ‘Please’ மற்றும் ‘Thank You’ என்று சொல்வதால் மின்சார செலவில் OpenAI எவ்வளவு பணத்தை இழந்துள்ளது,” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த OPEN AI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மேன், “பல்லாயிரக்கணக்கான டாலர்கள் நன்றாக செலவிடப்பட்டன, ஆனால் உங்களுக்கு ஒருபோதும் தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், AI Chatbot-க்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செலவு ஏன்

ChatGPT போன்ற AI தரவு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம், ஏற்கனவே உலகளாவிய மின்சார நுகர்வில் சுமார் 2 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி, ”ஒவ்வொரு ChatGPT- 4 கோரிக்கைக்கும் தோராயமாக 2.9 வாட்-மணிநேர மின்சாரம் தேவைப்படுகிறது என்று கூறுகிறது.

இது கூகிள் தேடலை விட பத்து மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், OpenAI தினமும் 1 பில்லியனுக்கும் அதிகமான கோரிக்கையை கையாளுவதால், இது தினசரி சுமார் 2.9 மில்லியன் கிலோவாட்-மணிநேர ஆற்றல் நுகர்வுக்கு வழிவகுக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்