இனிமே இவ்வளவு வரி கொடுக்கணும்! டோனால்ட் டிரம்ப் அதிரடி…யாருக்கு அதிகமான வரி?
மடகாஸ்கர், கம்போடியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 40 %க்கு மேல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி தான் அமெரிக்க நேரம் படி (நேற்று ஏப்ரல் 2) அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த (Liberation Day ) என்கிற நிகழ்ச்சியில் பல நாடுகளுக்கு வரி விதிப்பதாக அறிவித்தார். எந்தெந்த நாடுகளுக்கு அவர் எவ்வளவு வரி விதித்தார் ஏற்கனவே அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதித்துள்ளது என்பது பற்றிய விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதற்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு வரி?
நிகரகுவா (Nicaragua): நாடு விதித்த வரி: 36%, அமெரிக்கா விதித்த வரி: 18%
நார்வே (Norway): நாடு விதித்த வரி: 30%, அமெரிக்கா விதித்த வரி: 15%
கோஸ்டா ரிகா (Costa Rica): நாடு விதித்த வரி: 17%, அமெரிக்கா விதித்த வரி: 10%
ஜோர்டான் (Jordan): நாடு விதித்த வரி: 40%, அமெரிக்கா விதித்த வரி: 20%
டொமினிக்கன் குடியரசு (Dominican Republic): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
நியூசிலாந்து (New Zealand): நாடு விதித்த வரி: 20%, அமெரிக்கா விதித்த வரி: 10%
அர்ஜென்டினா (Argentina): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
ஈக்வடார் (Ecuador): நாடு விதித்த வரி: 12%, அமெரிக்கா விதித்த வரி: 10%
குவாத்தமாலா (Guatemala): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
ஹோண்டுராஸ் (Honduras): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
மடகாஸ்கர் (Madagascar): நாடு விதித்த வரி: 93%, அமெரிக்கா விதித்த வரி: 47%
மியான்மர் (பர்மா) (Myanmar (Burma): நாடு விதித்த வரி: 88%, அமெரிக்கா விதித்த வரி: 44%
துனிசியா (Tunisia): நாடு விதித்த வரி: 55%, அமெரிக்கா விதித்த வரி: 28%
கஸகஸ்தான் (Kazakhstan): நாடு விதித்த வரி: 54%, அமெரிக்கா விதித்த வரி: 27%
செர்பியா (Serbia): நாடு விதித்த வரி: 74%, அமெரிக்கா விதித்த வரி: 37%
எகிப்து (Egypt): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
சவுதி அரேபியா (Saudi Arabia): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
எல் சால்வடோர் (El Salvador): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
கோட் டி ஐவோரி Côte d’Ivoire): நாடு விதித்த வரி: 41%, அமெரிக்கா விதித்த வரி: 21%
லாவோஸ் (Laos): நாடு விதித்த வரி: 95%, அமெரிக்கா விதித்த வரி: 48%
போட்ஸ்வானா (Botswana): நாடு விதித்த வரி: 74%, அமெரிக்கா விதித்த வரி: 37%
டிரினிடாட் மற்றும் டொபாகோ (Trinidad and Tobago): நாடு விதித்த வரி: 12%, அமெரிக்கா விதித்த வரி: 10%
மொராக்கோ (Morocco): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
சீனா (China): நாடு விதித்த வரி: 67%, அமெரிக்கா விதித்த வரி: 34%
ஐரோப்பிய ஒன்றியம் (European Union): நாடு விதித்த வரி: 39%, அமெரிக்கா விதித்த வரி: 20%
வியட்நாம் (Vietnam): நாடு விதித்த வரி: 90%, அமெரிக்கா விதித்த வரி: 46%
தைவான் (Taiwan): நாடு விதித்த வரி: 64%, அமெரிக்கா விதித்த வரி: 32%
ஜப்பான் (Japan): நாடு விதித்த வரி: 46%, அமெரிக்கா விதித்த வரி: 24%
இந்தியா (India): நாடு விதித்த வரி: 52%, அமெரிக்கா விதித்த வரி: 26%
தென் கொரியா (South Korea): நாடு விதித்த வரி: 50%, அமெரிக்கா விதித்த வரி: 25%
தாய்லாந்து (Thailand): நாடு விதித்த வரி: 72%, அமெரிக்கா விதித்த வரி: 36%
சுவிட்சர்லாந்து (Switzerland): நாடு விதித்த வரி: 61%, அமெரிக்கா விதித்த வரி: 31%
இந்தோனேசியா (Indonesia): நாடு விதித்த வரி: 64%, அமெரிக்கா விதித்த வரி: 32%
மலேசியா (Malaysia): நாடு விதித்த வரி: 47%, அமெரிக்கா விதித்த வரி: 24%
கம்போடியா (Cambodia): நாடு விதித்த வரி: 97%, அமெரிக்கா விதித்த வரி: 49%
ஐக்கிய இராச்சியம் (United Kingdom): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
தென் ஆப்பிரிக்கா (South Africa): நாடு விதித்த வரி: 60%, அமெரிக்கா விதித்த வரி: 30%
பிரேசில் (Brazil): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
வங்கதேசம் (Bangladesh): நாடு விதித்த வரி: 74%, அமெரிக்கா விதித்த வரி: 37%
சிங்கப்பூர் (Singapore): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
இஸ்ரேல் (Israel): நாடு விதித்த வரி: 33%, அமெரிக்கா விதித்த வரி: 17%
பிலிப்பைன்ஸ் (Philippines): நாடு விதித்த வரி: 34%, அமெரிக்கா விதித்த வரி: 17%
சிலி (Chile): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
ஆஸ்திரேலியா (Australia): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
பாகிஸ்தான் (Pakistan): நாடு விதித்த வரி: 58%, அமெரிக்கா விதித்த வரி: 29%
துருக்கி (Turkey): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
இலங்கை (Sri Lanka): நாடு விதித்த வரி: 88%, அமெரிக்கா விதித்த வரி: 44%
கொலம்பியா (Colombia): நாடு விதித்த வரி: 10%, அமெரிக்கா விதித்த வரி: 10%
யாருக்கெல்லாம் அதிகமான வரி?
அமெரிக்கா அதிகமாக வரி விதித்த 5 நாடுகள் என்று பார்த்தால் கம்போடியா வுக்கு 49% விதிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, லாவோஸ் 48%, மடகாஸ்கர் 47%, வியட்நாம் 46%, பர்மா மற்றும் இலங்கை இரண்டு நாட்டிற்கும் 44 % வரி விதிக்கப்பட்டுள்ளது.