டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!
டிரம்ப் உடன் இருந்த அவரது மனைவி மெலனியா தனது கூலிங் கிளாஸை கழட்டடாமல் தொடர்ந்து அணிந்து இருந்ததால் அது மெலனியா இல்லை அவரது 'பாடி டபுள்' என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் அதிக மாகாணங்களில் முன்னிலை பெற்று எலக்டோரல் வாக்குகளை பெற்று வருகிறார்.
தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தொழிலதிபர் எலான் மஸ்க் உட்பட பிரபல தொழிலதிபர்களின் ஆதரவு இருந்தது. நேற்று டிரம்ப் தனது மனைவி மெலனியா உடன் புளோரிடா மாகாணத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள மண்டேல் பொழுதுபோக்கு மையத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிதத்தார்.
அப்போது, டிரம்ப் உடன் இருந்த அவரது மனைவி மெலனியா கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தார். அதே போல டொனால்ட் டிரம்ப் வீட்டிலும் மெலனியா கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தார். அதனை அவர் கழட்டவே இல்லை. வீட்டிற்கு வெளியே கூலிங் கிளாஸ் அணிந்தால் ஓகே, வீட்டிற்குள்ளும் அவர் கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தது இணையத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
இதனால், சில நெட்டிசன்கள் , இது டிரம்ப் மனைவி மெலனியா இல்லை. அவரை போலவே இருக்கும் பாடி டபுள். மெலனியா இல்லாத சமயத்தில் அவரது பாடி டபுள் எனப்படும் அவரை போலவே உள்ள இன்னொரு நபர் பயன்படுத்தப்படுகிறார் என கூறி வருகின்றனர்.
Melania’s been wearing sunglasses inside all day today. pic.twitter.com/4Wv3PwyA2h
— Ron Filipkowski (@RonFilipkowski) November 5, 2024
இதற்கு முன்னர், ரஷ்ய அதிபர் புடின் குறிப்பிட்ட காரணங்களுக்காக ‘பாடி டபுள்’ உபயோகப்படுத்தியதாகவும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் பாடி டபுள் உபயோகப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையாகின என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான பாடி டபுள் செய்திகள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.