அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்..வைரலாகும் வீடியோ!
அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு விழா கொண்டாட்டத்தில் நடனமாடி கேக் வெட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் இந்த விழாவில் முன் வரிசையில் கலந்து கொண்டார்.
Read More- “இனி அமெரிக்காவுக்கு பொற்காலம்… எதிரிகளுக்கு பதிலடி..” புதிய அதிபர் டிரம்ப் அதிரடி!
தேர்தலில் வெற்றிபெற்றபோதே டொனால்ட் டிரம்ப் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதே மகிழ்ச்சியில் தான் இப்போது பதவியேற்க வந்தபோதும் அவருடைய முகத்தில் தெரிந்தது. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக விழாவிற்கு வந்த அவர் மேடையில் சந்தோசமாக நடனமாட்டிக்கொண்டு கேக்கை வெட்டினார்.
THE MOST DANGEROUS MAN IN THE WORLD RIGHT NOW…???????????????????????? pic.twitter.com/b0MwA5xf2l
— il Donaldo Trumpo (@PapiTrumpo) January 21, 2025
கையில் இராணுவ வாளுடன் நடனம் ஆடிக்கொண்டு அவர் கேக் வெட்டிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன், பதவியேற்றுக்கொண்ட உற்சாகத்தில் அவர் தன்னுடைய மனைவி மெலனியா டிரம்ப் உடனும் கைகோர்த்து ஜோடி நடனம் ஆடினார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
Read More- டிரம்பின் அதிரடி முடிவுகள் : அவசர நிலை பிரகடனம் முதல்… பனாமா கால்வாய் வரை…
பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து டொனால்ட் டிரம்ப் பேசுகையில் ” என்னுடைய வாழ்வில் என்னால் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று. அதிபராக நான் பொறுப்பேற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனவும் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
US NEWS
2025 Presidential Post-Inaugurationpic.twitter.com/tEhDyJ9HF3
Presidential Inaugural Ball First DancePresident Donald J. Trump and First Lady Melania’s Inaugural Ball First Dance
— TT (@6002_TT) January 21, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025