பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது. ஜீன் கரோல் கேட்டதை விட 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஆபத்தானது என்றும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டொனால்ட் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் அரசியல் விளையாட்டு எடுபடாது – ரஷ்ய அதிபர்
30 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் தன்னை ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பாலியல் துன்புறுத்தியதாக கரேல் எழுதிய புத்தகத்தில் தெரிவித்தார். 1995-96 களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்யும்போது டிரம்ப் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடிவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றார், அப்போது பயத்தில் தான் போலீசில் புகார் செய்யவில்லை என்று கரோல் அந்த புத்தகத்தில் தெரிவித்து இருந்தார்.
கரோலின் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். கரோலின் புகார் பொய்யானது என்றும் அவரை நான் சந்திக்கவில்லை என்றும் அவர் தனது புத்தகங்களை விற்க ஜீன் கரோலின் தந்திரம் என்றும் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…