டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங்-உன் சந்திப்பு! இது ஒரு அற்புதமான நிகழ்வு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் இருவரது சந்திப்பு நேற்று வடகொரியாவில் நடைபெற்றது. இவர்களது சந்திப்பை “இது ஒரு அற்புதமான வரலாற்று நிகழ்வு” என்று வடகொரியா அரசு ஊடகமான கேசிஎன்ஏ நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும், பதவியில் இருக்கும் போது ஞாயிற்றுக்கிழமை வடகொரிய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ள அதிபர் என்ற பெருமையை டிரம்ப் அவர்கள் பெற்றுள்ளார்.
தென் கொரியாவிற்கு சுற்றுப் பயணமாக வந்த டிரம்ப் ,கிம் அவர்களிடம் சந்திக்கலாமா என்று அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. ஒரே ஆண்டில் மூன்றாவது முறை இவர்களது சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமெரிக்காவை கடும் எதிரியாகவே கண்ட வட கொரியா மக்களுக்கு இவர்களது இந்த சந்திப்பு அதிர்ச்சியாக உள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் , அணு ஆயுத பயன்பாடு குறித்து இரு நாடுகளின் சார்பில் குழு நிர்ணயிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் தங்கள் நாட்டிற்கு வரும் படி அழைப்பு விடுத்தனர்.