47-வது அமெரிக்க அதிபரானார் ‘டொனால்ட் டிரம்ப்’! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று டோன்லட் டிரம்ப் அமெரிக்க வெள்ளை மாளிகையின் 47-வது அதிபராக தேர்வாகி உள்ளார்.
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனல்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வந்தார்.
இந்த நிலையில், 538 மாகாணங்களில் 270 இடத்தில் வெற்றிப் பெற்றால் அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள் என இருந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார் என ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
இதனால், ட்ரம்பின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இதுவரை 227 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டொனால்ட் டிரம்ப் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலைப் பெற்று தற்போது வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.