பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!
ஏவுகணை, மின்சார காருக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவுக்கு சீனா நேற்று தடை விதித்ததற்குப் பதிலடியாக, சீன பொருட்கள் மீதான வரியைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் (2017-2021) சீனப் பொருட்களுக்கு வரி விதித்து வர்த்தகப் போரை தொடங்கினார். அதனை தொடர்ந்து, 2025 ஏப்ரல் முதல், ட்ரம்ப் “பரஸ்பர வரி” (Reciprocal Tariff) கொள்கையை அறிவித்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
முதலில் 84%, பின்னர் 145% ஆக உயர்ந்த இந்த வரி, மருத்துவ ஊசிகள் போன்ற சில பொருட்களுக்கு 245% ஆக உயர்ந்தது. வரி விதிப்புக்கு நாங்களும் பதிலடி கொடுப்போம் என்பது போல சீனா உறுதியாக இருந்த சூழலில் சீனா, அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்து (ஏப்ரல் 11, 2025), ஹாலிவுட் படங்களுக்கு கட்டுப்பாடு, அரிய மண் உலோகங்கள், காலியம் ஏற்றுமதி தடை செய்து பதிலடி கொடுத்தது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “அமெரிக்கா மிரட்டுவதை நிறுத்தி, சமமான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். வர்த்தகப் போருக்கு பயமில்லை” என்றார். எனவே, ஏவுகணை, மின்சார காருக்கு பயன்படுத்தும் அரிய உலோகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா நேற்று தடை விதித்ததற்குப் பதிலடியாக, சீன பொருட்கள் மீதான வரியைப் பல மடங்கு டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” சீனா பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டி வருகிறது. அவர்களின் மலிவான பொருட்கள் நமது தொழில்களை அழித்து, நமது தொழிலாளர்களை வேலையில்லாமல் ஆக்கியுள்ளன. இந்த 245% வரி, அமெரிக்கத் தொழில்களை மீட்டெடுக்கவும், நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் ஒரு தொடக்கமாகும். இது அமெரிக்காவின் பாதுகாப்பையும் செல்வத்தையும் மீட்டெடுக்கும் ஒரு வரலாற்று நடவடிக்கை.
நீங்கள் அமெரிக்காவுடன் நியாயமாக வியாபாரம் செய்ய விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். ஆனால், நீங்கள் மோசடி செய்து, நமது தொழில்களை திருடி, பென்டானில் போன்ற விஷத்தை அனுப்பினால், இந்த 245% வரி உங்களை தண்டிக்கும். இது சீனாவின் கையில் உள்ளது நியாயமாக நடந்தால், நாம் ஒப்பந்தம் செய்யலாம்” எனவும் தெரிவித்தார். மேலும், சீனா விதித்த தடையால், அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கணித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025