ட்விட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லை – டொனால்ட் டிரம்ப்

Default Image

எலான் மஸ்க்கைப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது இயங்கி வந்தாலும் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஐந்து பேர் உயிரிழந்த கலவரத்தைத் தூண்டியதாகவும், தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகவும் டிரம்பின் கணக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார். இதில் 15 மில்லியனுக்கும் அதிகமான  பயனர்கள் வாக்கெடுப்பில் வாக்களித்தனர், 51.8% சதவீதம் பேர் டிரம்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் இயக்கத்திற்கு வந்தது. இதற்குப் பிறகு, மஸ்க் தனது ட்வீட்டில், மக்கள் கூறிவிட்டனர், டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்படுவார் என்று கூறியிருந்தார். டிரம்பிற்கு இன்னும் 87 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (ஃபாலோவர்கள்) உள்ளனர்.

விளம்பரதாரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படும் ட்விட்டர் நிறுவனம், முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் ட்விட்டரில் சேர்ப்பதன்மூலம் அதன் இழந்த பயனர்களை மீண்டும் ட்விட்டருக்குத் திரும்பலாம் என்று நம்புகிறது.

ட்விட்டர் தடையைத் தொடர்ந்து, டிரம்ப் ட்விட்டருக்கு நிகரான, தனது ட்ருத் சோசியல் செயலி (Truth Social) உருவாக்கினார், தற்போது டிரம்ப் தனது ட்ருத் சோசியல் செயலியைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ட்விட்டருக்கு இன்னும் திரும்பப் போவதில்லை என்றும் கூறுகிறார். அதற்கு  எந்த காரணத்தையும் அவர் கூறவில்லை.

தனது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுவின் ட்ரூத் சோஷியல் தளத்துடன் தொடர்ந்து நீடிக்கப்போவதாக அறிவித்த டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளம்  அற்புதமாக” செயல்படுகிறது. டிரம்ப், எலான் மஸ்க்கைப் பாராட்டியதாகவும், 2024 இல் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான தனது திட்டங்களை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்