மீண்டும் ட்விட்டரில் டொனால்ட் ட்ரம்ப் பராக் ! பராக் ! 5 மணி நேரத்தில் 10 மில்லியன்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் தோல்வி அடைந்தார்.அந்நேரத்தில் ட்விட்டரில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் அடுத்தடுத்து சர்ச்சை கலந்த ஆதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.பலருக்கு வேலையை பறித்து வீட்டிற்கு அனுப்ப அடுத்தபடியாக ட்ரம்ப்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார் இதில் 51% பேர் சம்மதம் தெரிவித்து வாக்களித்தனர்.
இதனைத்தொடர்ந்து டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.ட்விட்டரில் டிரம்ப் மீண்டும் வந்ததுக்கு பலர் வரவேற்று மீம்ஸ் மூலம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் டிரம்பை பின்தொடர்பர்கள் இதற்கு முன்னதாக 88 மில்லியனுக்கு அதிகமானோர் இருந்தனர்.தற்பொழுது அவரது கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த 5 மணி நேரத்தில் 10 மில்லியனை நெருங்கியுள்ளது.