அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ‘ஷாக்’ தந்த டிரம்ப்! குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தம்?

அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்தார்.

Donald Trump

வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை (விசா), படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளை பெற்று வசிப்பவர்களை தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்க குடிமகன்களாக இருக்க அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் பிறந்து இருந்தால் எளிதாக குடியுரிமை (விசா) கிடைத்துவிடும்.

இந்த பிறப்பால் குடியுரிமை பெற்ற அயல்நாட்டினர் அங்கு கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் 48 லட்சம் பேர் உள்ளனர். இதில் 16 லட்சம் பேர் பிறப்பால் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்.

இப்படியான சூழலில், பிறப்பால் அமெரிக்க குடியுரிமை கொடுக்கும் சட்டம் குறித்து டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திடம் ஓர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று விரைவில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப், குடியுரிமை பற்றி பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்க குடியிரிமை சட்டத்தில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை குடியுரிமை சட்டமாக தான் இருக்கும். அயல்நாட்டினர் பிறப்பால் அமெரிக்க குடியுரிமை பெரும் சட்டத்தை மாற்ற உள்ளேன். இது குறித்து எங்கள் குடியரசு கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, பிறப்பால் குடியுரிமை பெரும் சட்டத்தை ரத்து செய்தாலோ, அதில் முக்கிய திருத்தும் கொண்டு வரப்பட்டாலோ அது அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை பெற்ற 16 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நேரடி பாதிப்பை உண்டு செய்யும் என்றும் அதன் பிறகு அமெரிக்காவில் பிறக்கும் அயல்நாட்டு குழந்தைகள் பிறப்பால் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் பெரும் சிக்கல் உண்டாகும் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

மேலும் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், குற்றப்பதிவு உள்ள நபர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இங்கேயே குடியுரிமை பெற்ற பலர் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் போலவேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்