ஒரே ஒரு புல்லட்., ஜனநாயகத்திற்காக நான் என்ன செய்தேன்.? தீவிர பிரச்சாரத்தில் டிரம்ப்.!
அமெரிக்கா: இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்குகின்றனர். குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அமெரிக்க மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு ஆதரவும் பெருகி வருகிறது.
கடந்த வாரம் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அண்மையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அனைத்திலும் இதனை குறிப்பிட்டு உரையாற்றினார்.
குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நடைபெற பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், ” நான் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள போவதில்லை. தெரிந்து கொள்வது அனைத்தும் தவறான தகவலாகவே இருக்கும். இது ஜனநாயகத்தின் அச்சுறுத்தல். அமெரிக்காவின் ஜனநாயகத்தை காப்பாற்ற நான் என்ன செய்தேன்.? கடந்த வாரம் ஜனநாயகத்திற்காக நான் ஒரு புல்லட்டை தங்கினேன்.” என்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவு கூர்ந்து டிரம்ப் கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், அவர்கள் (ஜனநாயக கட்சியினர்) தீவிரமானவர்கள். ஆனால், அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. எல்லாம் வல்ல கடவுளின் அருளால் உங்கள் முன் நான் நிற்கிறேன். நான் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இல்லை என்று கமலா ஹாரிஸ் (ஜனநாயக கட்சி – US துணை அதிபர்) கூறினார். நான் அமெரிக்காவில் மரைன் கார்ப்பரேஷனில் சேவை செய்து ஒரு வியாபார தளத்தை உருவாக்கினேன். ஆனால், நீங்கள் வசூல் செய்வதை தவிர வேறு எதையும் செய்யவில்லை என ஜனாதிபதி கட்சியிரையும் குடியரசுகட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார்.