பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை சுமந்து வந்து கடலில் இறங்கிய `ட்ராகன்' விண்கல கேப்சூலைச் சுற்றி வட்டமடித்த டால்ஃபின்கள்.  

NASA astronaut Sunita Williams return

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பியுள்ளனர். இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது.

இந்தத் தருணத்தில், ஒரு அற்புதமான நிகழ்வாக, டால்பின்களின் கூட்டம் விண்கலத்தைச் சுற்றி வட்டமடித்தது. இது நாசாவின் நேரடி ஒளிபரப்பில் பதிவாகி, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும், இது தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் டால்பின்கள் தான் முதலில் அவர்களை வரவேற்றது என்று பகிர்ந்து வருகின்றனர்.

இந்த டால்பின்களின் வரவேற்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினரின் நீண்ட விண்வெளி பயணத்திற்கு ஒரு இயற்கையான மற்றும் அழகிய தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். தற்போது, டிராகன் விண்கலத்தில் வெளியேறிய வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 45 நாள்கள் தொடர் சிகிச்சை, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

9 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமி திரும்பியுள்ள சுனிதா, வில்மோர் உடல் ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்த அழுத்த மாறுபாட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் பார்வைக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என்பதால் அவர்கள் தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்