ஜப்பானில் பலூன் விமானங்கள் மூலம் பூமியைக் காண்பதற்கான ஒரு பயணத்திற்கு ரூ.1.5 கோடி வசூலிக்கப்படுகிறது.
ஜப்பானை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் பூமியின் வளைவை காண்பதற்கான பலூன் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள சப்போரோவை தளமாகக் கொண்ட இவாயா கிகென் (Iwaya Giken) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் பூமியின் வளைவை காண்பதற்கான பலூன் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பலூன்கள் மூலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து மனிதர்களால் 25 கிமீ வரை பயணம் செய்ய முடியும்.
அதன் மூலம் பூமியின் வளைவை தெளிவாக பார்க்க முடியும். இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெய்சுகே இவாயா, “ஜப்பானின் விண்வெளியை சென்றடையும் முயற்சிகள் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) போன்ற அமெரிக்க நிறுவனங்களை விட பின்தங்கிவிட்ட நிலையில், விண்வெளியை அடைவதை எளிதாக்கச் செய்வதே தனது நோக்கம்” என்று கூறினார்.
இது மற்ற பலூன்களை போல் அல்லாமல் ஹீலியம் வாயு மூலம் விண்ணில் செலுத்தப்படும். ஒரு விமானி மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பலூனின் உள்கட்டமைப்பு 1.5 மீட்டர் (4.9 அடி) விட்டம் கொண்டது. இதற்கு உள்ளே இருந்து விண்வெளிக்கு மேலே உள்ள இடத்தையும் அல்லது கீழே உள்ள பூமியையும் பார்க்க உதவும் வகையில் பல பெரிய ஜன்னல்களைக் கொண்டுள்ளது.
இந்த பலூன் விமானத்திற்கான முதல் பயணத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணத்தின் தொடக்கத்தில் பயணிகளிடம் ஒரு பயணத்திற்கு 24 மில்லியன் யென் (சுமார் ₹1.5 கோடி) வசூலிப்பதாகவும் இதனை இயக்குவதற்கு தீவிர பயிற்சி எடுக்க வேண்டியதில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…