டாப் 10 மில்லியனர்ஸ் உள்ள நகரங்கள் எவை தெரியுமா ?
அதிக மில்லியனர்கள் உள்ள நகரங்களின் பட்டியலை ஹென்லி & பார்ட்னர்ஸ் குழுமத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 3.5 லட்சம் மில்லியனர்களுடன் நியூயார்க் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
3 லட்சம் மில்லியனர்களுடன் டோக்கியோ இரண்டாம் இடமும் 2.76 லட்சம் மில்லியனர்களுடன் சான் பிரான்சிஸ்கோவின் விரிகுடா பகுதி மூன்றாம் இடமும் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் லண்டன், சிங்கப்பூர், லாஸ் ஏன்ஜல்ஸ், மாலிபு, சிகாகோ அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன், சீனாவில் உள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவை உள்ளன.
அதிக மில்லியனர்களைக் கொண்ட டாப் 10 நகரங்களில் பாதி நகரங்கள் அமெரிக்காவில் உள்ளன.1 மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் என அறிக்கை வரையறுக்கிறது.
சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் மில்லியனர் மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடக இருப்பதாக நியூ வேர்ல்ட் வெல்த் நிறுவனம் சேகரித்த தகவலில் தெரிவிக்கின்றது.