ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு போகாதீங்க! அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை!
ஜம்மு - காஷ்மீர் பகுதிகளுக்கு மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க அரசு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் அறிவிப்பின் படி “அமெரிக்க குடிமக்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதைப்போல, பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்ந்திருக்கும் பகுதிகளான பஹல்காம், குல்மார்க், மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு செல்வதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.
இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) மற்றும் இந்தியா-சீன எல்லைப் பகுதிகளில் இராணுவ மோதல்கள் மற்றும் வன்முறை அபாயம் உள்ள காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் எனவும்ம், அங்கு பயணம் அவசியமாக இருந்தால், உள்ளூர் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அமெரிக்க தூதரகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அமெரிக்க தூதரகம் அவசரகாலங்களில் உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொடர்பு வசதியை வழங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தொடர்பு விவரங்கள்:
முகவரி: U.S. Embassy New Delhi, Shantipath, Chanakyapuri, New Delhi – 110021, India
தொலைபேசி எண்: +91-11-2419-8000 (இந்தியாவிலிருந்து அழைக்கும்போது 011-2419-8000; அமெரிக்காவிலிருந்து அழைக்கும்போது 011-91-11-2419-8000)
தொலைநகல் (Fax): +91-11-2419-0017
மின்னஞ்சல்: [email protected] (அமெரிக்க குடிமக்கள் சேவைகள் தொடர்பான கேள்விகளுக்கு)