டாய்லெட்டை கூட விட்டு வைக்கல..! உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வேதனை..!
ரஷ்ய வீரர்கள், உக்ரைனில் உள்ள டாய்லெட்டை கூட விட்டு வைக்காமல் கொள்ளையடித்துச் சென்றதாக உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கூறினார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில் இரு தரப்பிலும் பயங்கர பொருள் மற்றும் உயர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எமின் தபரோவா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா வந்த முதல் உக்ரேனிய அதிகாரி எமின் தபரோவா ஆவார்.
டாய்லெட்டை கூட விட்டு வைக்கல :
இந்தியாவிற்கு வந்துள்ள எமின் தபரோவா, புது டெல்லியில் நடந்த ஒரு சிந்தனைக் குழு நிகழ்வில் பேசுகையில், ரஷ்யா- உக்ரைன் போரின் போது ரஷ்ய வீரர்கள் பலர், உக்ரைனில் உள்ள வீடுகளில் இருக்கும் கழிவறை தொட்டிகள், வீட்டு உபயோக பொருட்கள் எதையும் விட்டு வைக்காமல் கொள்ளையடித்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உக்ரைனில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
#WATCH | Delhi: “…When we receive intercepted conversations of Russian soldiers with their wives & mothers, they are about what to steal from Ukrainian households, they steal sometimes even toilet bowls”: Deputy Minister of Foreign Affairs of Ukraine Emine Dzhaparova pic.twitter.com/f837LV8HI1
— ANI (@ANI) April 11, 2023
கூடுதல் உதவி வேண்டும் :
இதற்கிடையில், போருக்கு நடுவில் கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கோரி உக்ரைன் அதிபர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடிதத்தை உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமின் தபரோவா தனது பயணத்தின் போது மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.