“இதை செய்யுங்கள் $47 டாலர்”! டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் எலான் மஸ்க்!

டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வாக்காளர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என எலான் மஸ்க் எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Donald Trump us election 2024

அமெரிக்கா : அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட எலான் மஸ்க் ட்வீட்டர் பக்கத்தின் ஸ்பேசில் எலான் மஸ்க்கை நேரடியாகப் பேட்டியெடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்க முன் வருபவர்களுக்கு 47$ (இந்திய மதிப்பின் படி 4,000ரூபாய் வழங்கப்படும்) என அசைத்தலான அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான சட்டத்திருத்தம் குறித்து டிரம்ப் பேசிவரும் நிலையில் அவரது இந்த கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக எலன் மஸ்க் முன்வந்துள்ளார்.

இது குறித்து குட்டியான அறிக்கை வெளியீட்டு இருக்கும் எலான் மாஸ்க் அதில் கூறியதாவது ” ட்ரம்ப்க்கு ஆதரவு தெரிவிப்பவர்களைப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்த மனுவில் கையெழுத்திடும் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வாக்காளருக்கும் $47 பணம் வழங்கப்படும்.

ஸ்விங் மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட 1 மில்லியன் வாக்காளர்களை அரசியலமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பாகப் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமைக்கு ஆதரவாகக் கையெழுத்திட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

இந்த திட்டம் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் வட கரோலினாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 21 அன்று முடிவடையும்” எனக் கூறியுள்ளார். டிராம்க்கு இந்த அளவுக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருவது டிரம்ப் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்