காணாமல் போன கதிரியக்க கேப்சூல் கண்டுபிடிப்பு..! இனி பயமில்லை..!

Default Image

மேற்கு ஆஸ்திரேலியாவில் டிரக்கில் இருந்து காணாமல் போன எக்ஸ்ரே கதிர்களை வெளிவிடும் கதிரிக்க கேப்சூல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் டிரக்கில் இருந்து கதிரியக்க கேப்சூல் ஒன்று காணாமல் போனது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் முயற்சியில் இந்த கதிரியக்க கேப்சூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கேப்சூல் ஒரு மணி நேரத்திற்கு 10 எக்ஸ்ரே கதிர்வீச்சுக்கு சமமான கதிர்வீச்சுகளை வெளிவிடும் தன்மை கொண்டது.

radioactive capsule
radioactive capsule [Image Source : Twitter/@StuWatts73]

ஜனவரி 10 அன்று பில்பரா பிராந்தியத்தில் நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கப் பகுதிக்கும் பெர்த்தின் வடகிழக்கு பகுதிகளுக்கும் இடையே டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட போது காணாமல் போனது. இந்த கேப்சூலில் சுரங்க செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் சீசியம்-137 என்ற பொருள் உள்ளது.

radioactive capsule missing
[Image Source : abc.net]

இந்த கேப்சூலில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு தீக்காயங்கள் அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும். மக்கள் கேப்சூல் அல்லது அதைப் போன்ற பொருளை பார்த்தால், அதிலிருந்து விலகி இருங்கள், அதைத் தொடவோ எடுக்கவோ வேண்டாம் என்று டாக்டர் ராபர்ட்சன் கூறியிருந்தார். எனவே மக்கள் அனைவரும் 8-6 மி.மீ அளவுள்ள கேப்சூலைப் பார்த்தால் அதிலிருந்து விலகி இருக்குமாறும் இது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

radioactive capsule 1
The disappearance of an X-ray capsule from a truck in Western Australia has alarmed health officials. [Representative Image]

இதனையடுத்து நடைபெற்ற தேடலில், சிறப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு வாகனம், கேப்சூலில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சைக் கண்டறிந்தது. எளிதாக கையில் எடுத்து செல்லும் கதிரியக்கத்தை கண்டறியும் கருவி மூலம் வெளிவரும் கதிர்வீச்சை பின்தொடர்ந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 2மீ (7அடி) தொலைவில் கேப்சூல் கண்டுபிடிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்