10 மாதங்களுக்கு பின் ஆற்றில் தொலைத்த ஐபோன் கண்டெடுப்பு…! எந்த கோளாறும் இன்றி இயங்கிய போன்..!

Default Image

இங்கிலாந்தில், 10 மாதங்களுக்கு முன் தொலைந்த ஐபோன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எந்த கோளாறும் இன்றி இயங்கியுள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் தனது ஐபோனை ஆகஸ்ட் 2021 இல் இளங்கலை விருந்தின் போது சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதியில் தொலைத்தார். போனை தேடியும் கிடைக்காததால், அப்படியே விட்டுவிட்டார்.

இந்த நிலையில், போன் தொலைந்து 10 மாதங்களுக்கு பின், மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் செய்யும் போது, டேவிஸின் ஐபோனைக் ஆற்றில் கண்டெடுத்தார். அந்த போனை சார்ஜ் போட்ட போது, மீண்டும் எந்த கோளாறும் இன்றி இயங்கியுள்ளது.

தொலைந்து போன ஐபோன் பற்றி அந்த புகைப்படத்துடன் மிகுவல் பச்சேகோ முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு 4000 முறை பகிரப்பட்டது, ஆனால் ஐபோனை தொலைத்த டேவிஸ் சமூக ஊடகங்களில் இல்லை. இருப்பினும், அவரது நண்பர்கள், தொலைபேசியை அடையாளம் கண்டு, பச்சேகோவுடன் தொடர்புகொள்ள டேவிஸுக்கு உதவினார்கள். இதனை தொடர்ந்து அவர், அந்த ஐபோனை பெற்றுக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்