Digital Passport : வந்துவிட்டது டிஜிட்டல் பாஸ்போர்ட்… சோதனை முயற்சியில் களமிறங்கிய பின்லாந்து.!

Finland E Passport

உலகம் முழுக்க தற்போது பணப்பரிவர்த்தனை, பயண டிக்கெட் என ஆரம்பித்து கல்வி சான்றிதழ் வரை டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. ஒரு சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே இன்னும் இணையவழிக்கு திரும்பாமல் பழைய நடைமுறையில் இருந்து வருகிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று பாஸ்போர்ட்.

இதிலும் டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகில் முதல் நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பின்லாந்து நாடானது ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகப்டுத்தியுள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது. பின்லாந்தில் இந்த திட்டத்தின் கீழ் டிஜிட்டல் பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் டிக்குரிலா மற்றும் ஹெல்சின்கி விமான நிலையத்தில் உள்ள போலீஸ் சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்லாந்தில் இருந்து புறப்படும்போது அல்லது வரும்போது பின்லாந்து நாட்டு குடிமக்கள் டிஜிட்டல் பாஸ்போர்ட் ஆவணத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆகஸ்ட் 28 முதல் 2024 பிப்ரவரி இறுதி வரை சோதனை முயற்சியாக இந்த செயல்முறை நடைமுறையில் உள்ளது.  இந்த இ பாஸ்போர்ட் மூலம் லண்டன், மான்செஸ்டர் மற்றும் எடின்பர்க் ஆகிய இடங்களுக்கு விமானங்களில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்