Categories: உலகம்

மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!

Published by
அகில் R

கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது  மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென்  (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள்.

இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) Valley Wayயில் அமைந்துள்ள அவரது வீட்டில் லீரேன் சென்  இருந்தாக அவருக்கு தெரிந்த ஒருவர்  911 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து  சென்று போலீசார் அங்கு பார்த்தபோது லீரேன் சென் படுக்கையறையில் நிற்பதை நாங்கள் கண்டோம், அவரது மனைவி உயிரிழந்த நிலையில் அவருக்கு பின்னால் அவரின் உடல் தரையில் கிடந்தது.

உயிரிழந்த சுவானி யு தலையில் கடுமையான காயம் இருந்தது மற்றும் சென்னின் வலது கை வீக்கத்துடன் ஊதா நிறத்தில் இருந்தது. மேலும் அவரின்ஆடைகள் மற்றும் கால்களில்  இரத்தம் இருந்ததுடன், அவரது கையில் கீரல்கள் இருந்தது” என தெரிவித்தனர்.

லீரேன் சென் மற்றும்  அவரது மனைவி சுவானி யு இருவரும் சீனாவின் Tsinghua பல்கலைக்கழகத்திலும்,  கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஒன்றாக படித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் லீரேன் சென் சென் சிறைக்கு செல்வது உறுதி, ஆனால் அவர் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்தனர்.

 

Published by
அகில் R

Recent Posts

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

22 minutes ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…

36 minutes ago

“புயலுக்கு இதுதான் தீர்வா? சுயநல ஆட்சியாளர்கள்..” அறிக்கையில் சீறிய விஜய்!

சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…

45 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல் – மீனாவிடம் உண்மையை உளறும் பார்வதி ..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…

1 hour ago

“உடனே விடுவிக்க வேண்டும்”..ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை! நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…

2 hours ago

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!  ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?

மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…

2 hours ago