மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!
கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென் (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள்.
இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) Valley Wayயில் அமைந்துள்ள அவரது வீட்டில் லீரேன் சென் இருந்தாக அவருக்கு தெரிந்த ஒருவர் 911 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்று போலீசார் அங்கு பார்த்தபோது லீரேன் சென் படுக்கையறையில் நிற்பதை நாங்கள் கண்டோம், அவரது மனைவி உயிரிழந்த நிலையில் அவருக்கு பின்னால் அவரின் உடல் தரையில் கிடந்தது.
உயிரிழந்த சுவானி யு தலையில் கடுமையான காயம் இருந்தது மற்றும் சென்னின் வலது கை வீக்கத்துடன் ஊதா நிறத்தில் இருந்தது. மேலும் அவரின்ஆடைகள் மற்றும் கால்களில் இரத்தம் இருந்ததுடன், அவரது கையில் கீரல்கள் இருந்தது” என தெரிவித்தனர்.
லீரேன் சென் மற்றும் அவரது மனைவி சுவானி யு இருவரும் சீனாவின் Tsinghua பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஒன்றாக படித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் லீரேன் சென் சென் சிறைக்கு செல்வது உறுதி, ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்தனர்.