Singapore: சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்.!

சிங்கப்பூரின் புதிய அதிபராக பதவியேற்று கொண்டார், இந்திய வம்சாவளி சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்னம்.

சிங்கப்பூர் அதிபராக பொறுப்பில் இருந்த ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் நிறைவு பெரும் முன்பே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெளிநாடு வாழ் சிங்கப்பூர்காரர்கள் உட்பட சுமார் 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இதில், தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதக வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

முன்னதாக, சிங்கப்பூர் அதிபராக இருந்த ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் நேற்றுடன் (செப்டம்பர் 13) நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்று கொண்டார் தர்மன் சண்முகரத்ன. இன்று நடைபெற்று வரும், பிரமாண்டமாக விழாவில் பதவி பதவியேற்றார்.

இலங்கை தமிழர் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் , புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த 2001ஆம் ஆண்டு முதல், 2006, 2011, 2015, 2020 என தொடர்ச்சியாக சிங்கப்பூர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2015- 2023 காலகட்டம் வரை சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர். 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2011 முதல் 2019 மே மாதம் வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர். கடந்த மே மாதம் தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி பிரதமர் தேர்தலுக்காக தயார் ஆகி வெற்றி கண்டுள்ளார் தமிழ் வம்சாவளியான தர்மன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்