23.5 கோடி ட்விட்டர்பயனர்களின் விவரங்கள் கசிவு! வெளியான தகவல்.!
23.5 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் மிகப்பெரும் சமூக தளமான ட்விட்டரில் 23.5 கோடி பயனர்களின் தரவுகள் ஹேக்கிங் செய்யப்பட்டு ஆன்லைனில் கசிந்துள்ளது, ட்விட்டர் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பற்றிய விவரங்கள் ஹேக்கிங் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் “தி வாஷிங்டன் போஸ்ட்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை இல்லாத மிகப்பெரிய ட்விட்டர் தரவு கசிவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தகவல் கசிவு, 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ட்விட்டரில் ஏற்பட்ட குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின், இணை நிறுவனர் அலோன் கால் இந்த ட்விட்டர் தரவு கசிவை ஆன்லைனில் கண்டறிந்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் மேலும் கூறியது.