“எதற்கும் தகுதியற்றவர்”…டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்த கமலா ஹரிஷ்!
தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கமலா ஹரிஷ் டொனால்ட் டிரம்ப் "எதற்கும் தகுதியற்றவர்" என விமர்சித்து பேசியுள்ளார்.
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் போது இருவரும் மாறி..மாறி விமர்சித்தும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த கமலா ஹரிஷ் டொனால்ட் டிரம்ப் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ட்ரம்ப் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்போது அவர் சேவை செய்யத் தகுதியற்றவர் என்று சொல்வேன். ஏனென்றால், அவர் அந்த விஷயத்தில் நிலையற்றவர் மிகவும் ஆபத்தானவர்.
நேரத்தைச் சம்பந்தம் இல்லாமல் செலவு செய்து மற்றவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட குறைகளைப் பற்றிப் பேசுவதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அவருக்கு நிறையப் பேர் ஆதரவு அளித்து டிரம்பிற்கு தான் “பாதி நாடு” என கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு போதும் நான் அமெரிக்க மக்களைக் குறை சொல்லவே மாட்டேன். ஆனால், அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அது என்னவென்றால், உண்மையில், நீங்கள் டொனால்ட் டிரம்ப் சொல்வதைக் கேட்டால் , அவரது அரசியல் பேரணிகளில் ஏதேனும் ஒன்றைப் பார்த்து நம்பினால், அவர் அமெரிக்க மக்களை இழிவுபடுத்து எண்ணம் கொண்டவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ” எனவும் ஹாரிஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” டிரம்ப் ஒரு எதிரியைப் பற்றிப் பேசுபவர். உள்ளே இருக்கும் ஒரு எதிரி, அமெரிக்க மக்களைப் பற்றிப் பேசி, அமெரிக்க இராணுவத்தை அமெரிக்க மக்கள் மீது திருப்புகிறார் எனவும்” கமலா ஹரிஷ் கடும் கோபத்துடன் சாடியுள்ளார். கமலா ஹரிஷ் சொன்ன இந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,டொனால்ட் டிரம்ப் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.