உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா நாடுகடத்தியது இனப்படுகொலைக் குற்றம்..! டிமிட்ரோ குலேபா
உக்ரேனியக் குழந்தைகளை ரஷ்யா நாடுகடத்தியது இனப்படுகொலைக் குற்றம் என்று டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.
உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா நாடுகடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது இனப்படுகொலைக் குற்றம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் :
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கியது. இந்த போரில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பல சேதங்கள் ஏற்பட்டன. போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.
இனப்படுகொலைக் குற்றம் :
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, உக்ரேனிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரஷ்யா கட்டாயமாக மாற்றியதாகக் கூறப்படுவது, நவீன வரலாற்றில் மிகப்பெரிய கட்டாய நாடுகடத்தலாக இருக்கலாம் என்று கூறினார். இது ஒரு இனப்படுகொலைக் குற்றம் என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க ஆதரவு அறிக்கை :
அமெரிக்க ஆதரவு அறிக்கையின்படி, ரஷ்யா குறைந்தபட்சம் 6,000 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா மற்றும் ரஷ்யாவில் உள்ள முக்கிய இடங்களில் தங்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.