தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் நோவா ககோவ்காவில் சோவியத் காலத்து அணை இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், டினிப்ரோ ஆற்றங்கரையில் உள்ள 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத்தொடர்ந்து, அணையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து 885 பேர் வெளியேற்றப்பட்டனர். கெர்சன் பகுதியின் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின், அனைத்து அவசரகால சேவைகளும் மக்களுக்கு வழங்கப்டும் என்று உறுதியளித்துள்ளார். இந்த அணையை ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தநிலையில், உக்ரைன் இதனை போர்க்குற்றமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 8.5 அடி குறைந்துள்ளதாகவும், இன்னும் 30 அடி வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு வரும் குளிர்ச்சியான நீர் தடைபட்டுள்ளதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…