சூடானில் ராணுவ மோதல் : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு.!

Default Image

வடக்கு ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று 56 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் வரும் மே மாதம் வீடு திரும்ப இருந்த, கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இந்தியர் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை:

சூடானில் அவருடன் இருந்த ஆல்பர்ட் அகஸ்டினின் மனைவியும் மகளும் பத்திரமாக இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்