இந்தோனேசியா நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Indonesia Landslide

ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 20 அன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து, கார்கள் மற்றும் வீடுகள் புதைந்தன.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, 8 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை மாற்றத்தால் கனமழை, திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியா மழைக்காலத்தில் நிலச்சரிவுகளுக்கு ஆளாகிறது. அங்கிருக்கும் மலைப்பகுதிகளில் வாழும் மக்கள், வெள்ளம் ஏற்படும் சமவெளிகளுக்கு அருகில் வாழ்கின்றனர். பொதுவாக, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவ மழை இந்தோனேசியாவில் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்