நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இதனால், பலியானோர் எண்ணிக்கை 100-ஐ எட்டவுள்ளது.
![Nepal - Earthquake](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Nepal-Earthquake-.webp)
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. தற்பொழுது, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தூள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், திபெத் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தின் போது, பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
சுமார் 1,500 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)