#NASA Record:டார்ட் விண்கலத்தை வைத்து சிறுகோளின் திசையை திருப்பியது நாசா

Default Image

பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது.

நாசாவின் இரட்டை சிறுகோள் திசை திருப்புதல் சோதனை (Double Asteroid Redirection Test- DART), டிமோர்போஸ் எனும் சிறுகோள் மீது மோத  வைக்கப்பட்டது.

நாசாவின் இந்த சோதனையானது உலகின் முதல் கோள் பாதுகாப்பு சோதனையாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கான தொழிநுட்பத்தை சோதிக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

கிட்டத்தட்ட 530 அடி அகலம்  உள்ள டிமோர்போஸ் சிறுகோள் மீது நாசாவின் டார்ட் விண்கலம் மோத வைக்கப்பட்டு அதன் பாதையை மாற்றி அமைத்துள்ளது.

பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் (11 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் சிறுகோள் வரும் போது, மோதல் ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்