காசா மருத்துவமனைகள் சேதம் – பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்!
காசாவில் 3 மருத்துவமனைகள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் சேதமடைந்து முழுமையாக இயங்கவில்லை என பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அன்றில் இருந்து இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழி, தரைவழி என பல்வேறு முனைகளில் இருந்து அவர்களை ஒடுக்கவேண்டும் என இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுபோன்று இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்கி வருகின்றனர். இந்த இரு தரப்பு தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா மற்றும் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான உயிரி பறிபோகியுள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், உணவு, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். போரை நிறுத்தம் வேண்டும் என ஐநா உள்ளிட்ட வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேல் சென்றார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
இந்த சூழலில், காசாவில் உள்ள அல் – அஹிலி அரசு மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 ஆயிரம் பேர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுபோன்று காஸாவில் ஒருசில மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த குண்டுவீச்சில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது.
காசா மருத்துவமனை தாக்குதல் – ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்!
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, இஸ்லாமிக் ஜிகாத் மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலை ஹமாஸ் தான் செய்துள்ளது என இஸ்ரேல் ஆதாரங்களை வெளியிட்டது. இந்த பரபரப்பான சூழலில், காசாவில் 3 மருத்துவமனைகள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் சேதமடைந்து முழுமையாக இயங்கவில்லை என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், காசாவில் 3 மருத்துவமனைகள் சுத்தமாக சேதமடைந்து இயங்கவில்லை. 25க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுடன் 120 லாரிகள் காசா எல்லையில் காத்திருக்கின்றன என கூறியுள்ளது. இதனிடையே, காசா குன்றில் அல் – ஐஹ்ரா என்ற பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் மீது குண்டு வீசி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.