தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து 3 பேர் பலி!!
தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம்.
தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அணை ஒன்று இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிந்ததாக தெரிவித்துள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை(செப் 11) காலை அணை உடைந்து 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சேதம் மற்றும் பாதிப்பை மதிப்பிடுவதற்கு பேரிடர் மேலாண்மைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சுரங்கத்தின் உரிமையாளர் உயிரிழப்புகள் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்றும் அவர்கள் கூறினர்.