Categories: உலகம்

ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு..விளாடிமிர் புதின் இறந்துவிட்டாரா.? கிரெம்ளின் மாளிகை விளக்கம்.!

Published by
செந்தில்குமார்

கடந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஜெனரல் எஸ்.வி.ஆர் என்ற டெலிகிராம் சேனல் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று விளாடிமிர் புதின் மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8:42 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்தியை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதின் இறந்துவிட்டதாக செய்தியை பரப்பிய டெலிகிராம் சேனல் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்க்க சதி நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த  சேனலில் வெளியான தகவலின்படி, “ரஷ்யாவில் தற்போது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெறுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று மாலை வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மாஸ்கோ நேரப்படி 20.42 மணிக்கு மருத்துவர்கள் புதினின் மரணத்தை அறிவித்தனர்.”

“இப்போது ராணுவ தளபதி டிமிட்ரி கோச்னேவின் தனிப்பட்ட உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் பாதுகாவலர்களால், புதினுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது சடலத்துடன் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். டிமிட்ரி கோச்னே ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்புக் கவுன்சில் செயலரான செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுடன் தொடர்பில் இருக்கிறார்.”

“ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை போல தோற்றமளிக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விளாடிமிர் புதின் இறந்த பிறகு, அதிபராக மாறுவதற்கு செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் ஆட்சி கவிழ்ப்புக்கு செய்யப்படும் ஒரு சதி.” என்று முன்னாள் கிரெம்ளின் லெப்டினன்ட் ஜெனரலின் டெலிக்ராம் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளாடிமிர் புதின் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற தகவலை கிரெம்ளின் மாளிகை நிராகரித்ததோடு புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடின் இறந்துவிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஒரு பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவலுக்கு மறுப்புத்தெரிவிக்காத நிலையில், புதின் இறந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு மட்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

1 minute ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

40 minutes ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

1 hour ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

1 hour ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

2 hours ago

”அப்பா.. இசை வந்து இருக்கேன்” தந்தை குமரி அனந்தனின் உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை.!

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…

2 hours ago