ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு..விளாடிமிர் புதின் இறந்துவிட்டாரா.? கிரெம்ளின் மாளிகை விளக்கம்.!
கடந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஜெனரல் எஸ்.வி.ஆர் என்ற டெலிகிராம் சேனல் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று விளாடிமிர் புதின் மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8:42 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்தியை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதின் இறந்துவிட்டதாக செய்தியை பரப்பிய டெலிகிராம் சேனல் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்க்க சதி நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த சேனலில் வெளியான தகவலின்படி, “ரஷ்யாவில் தற்போது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெறுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று மாலை வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மாஸ்கோ நேரப்படி 20.42 மணிக்கு மருத்துவர்கள் புதினின் மரணத்தை அறிவித்தனர்.”
“இப்போது ராணுவ தளபதி டிமிட்ரி கோச்னேவின் தனிப்பட்ட உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் பாதுகாவலர்களால், புதினுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது சடலத்துடன் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். டிமிட்ரி கோச்னே ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்புக் கவுன்சில் செயலரான செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுடன் தொடர்பில் இருக்கிறார்.”
“ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை போல தோற்றமளிக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விளாடிமிர் புதின் இறந்த பிறகு, அதிபராக மாறுவதற்கு செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் ஆட்சி கவிழ்ப்புக்கு செய்யப்படும் ஒரு சதி.” என்று முன்னாள் கிரெம்ளின் லெப்டினன்ட் ஜெனரலின் டெலிக்ராம் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விளாடிமிர் புதின் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற தகவலை கிரெம்ளின் மாளிகை நிராகரித்ததோடு புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடின் இறந்துவிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஒரு பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவலுக்கு மறுப்புத்தெரிவிக்காத நிலையில், புதின் இறந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு மட்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.