கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது – விஞ்ஞானியின் அதிர்ச்சியூட்டும் தகவல்..!
மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க விஞ்ஞானி கருத்து.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இந்த வைரஸ் ஆனது முதன் முதலாக சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது.
இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எனபவர், வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் தி ட்ரூத் அபவுட் வூஹான் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கொரோனா வைரஸ் வுகாண் ஆய்வகத்தில் இருந்து தான் வெளியேறியது. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு ஆய்வகங்களில் சரியான உயிரியல் பாதுகாப்பு இடர் மேலாண்மை ஆகிவை உறுதி செய்வதற்கான போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. இதன் விளைவாக தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேனாவிபி வுகாண் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிவு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.