இந்த வகை இரத்திற்கு கொரோனா பாதிப்பு குறைவு தான் ! வெளியான ஆய்வு அறிக்கை.!

Default Image

உங்களுக்கு ஓ பிளட் குரூப்பா அப்போ கொரோனா தாக்கும் கம்மியாக இருக்குமாம் ஆய்வின் அதிர்ச்சி.

இதுவரை உலக அளவில் 7,732,948 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 428,248 பேர் உயிரிழந்துள்ளனர். 3,956,279 பேர் குணமடைந்துள்ளனர்.  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்படுகிறார்கள், அல்லது அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள்.இது  ஒரு நபரின் இரத்த குழுவில் இருக்கலாம். ஒரு நபர் வைரஸால் பாதிக்கப்படுவதற்கு ABO இரத்தக் குழு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று அண்மையில் நடத்திய ஆய்வுகளில்  சொல்லப்படுகிறது .

மரபணு சோதனை நிறுவனமான 23andMe இன் அன்மையில் ஆராய்ச்சி நடத்தியதில் ஆராய்ச்சியாளர்களுக்கு சிந்திக்க சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளது. அங்கு ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட  தகவல்களின்படி, O இரத்தக் குழு உள்ளவர்கள் கொரோனா வைரஸக்கு எதிராக பாதுகாப்பாக உள்ளார்களாம். மற்ற இரத்த வகைகளுடன் ஒப்பிடும்போது ஓ வகை வைரஸிலிருந்து பாதுகாப்பாகத் இருக்கிறது எனறு ஆய்வுகளில் கூறியுள்ளது. O இரத்த வகை கொண்ட நபர்கள் கொரோனாவுக்கு பரிசோதித்த பிற இரத்த வகைகளைக் கொண்ட  9-18 சதவீதம் குறைவாக உள்ளனர்.  750,000 க்கும் மேற்பட்ட  0 இரத்த மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கருத்து சொல்லபட்டது.

 A வகை ரத்தம் உள்ளவர்கள் கொரோனாவிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, A அல்லாத இரத்தக் குழுக்களுடன் ஒப்பிடும்போது கொரோனா தோற்று வருவதற்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் இரத்தம் O இரத்தக் குழுக்களுடன் ஒப்பிடும்போது குறைந்த ஆபத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.

இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் கொரோனா மையப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஒரு இரத்தக் குழு உள்ளவர்கள் கொரோனாவிற்கு  அதிக ஆபத்தில் உள்ளனர். அதே நேரத்தில் O இரத்தக் குழு உள்ளவர்கள் நோய்த்தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்