சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தங்கள் சொந்தங்களின் உடலை தெருக்களில் தகனம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சீன மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சீன அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில், கொரோனா மேலும் வேகமாக பரவத் தொடங்கியது.
ஷாங்காயில் தொற்றுநோய் பரவல் மிகவும் வேகமாக உள்ளது, மேலும் இது 70 சதவீத மக்கள்தொகையை எட்டியிருக்கலாம் என ருய்ஜின் மருத்துவமனையின் துணைத் தலைவர் சென் எர்ஜென் மற்றும் ஷாங்காயின் கோவிட் நிபுணர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், டிசம்பர் முதல் 20 நாட்களில் சீனாவில் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டனை தளமாகக் கொண்ட பகுப்பாய்வு நிறுவனமான ஏர்பினிட்டியின் அறிக்கை கூறியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தகனம் செய்ய இடம் இல்லாத காரணத்தாலும், தகனச் சடங்குகளின் விலை உயர்ந்துள்ள காரணத்தாலும், தெருக்களில் தங்கள் சொந்தகளின் உடல்களை தகனம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…